காலையில் ஏன் “கௌசல்யா சுப்ரஜா” என சுப்ரபாதம் பாடுகிறோம்??

132

காலையில் ஏன் “கௌசல்யா சுப்ரஜா” என சுப்ரபாதம் பாடுகிறோம் என்பதை – விளக்கும் எளிய கதை.

ஒருமுறை விஸ்வாமித்திரரின் யாகத்தினை காக்க சென்ற போது, கங்கைக்கரையில், ராம லட்சுமணர்கள் தங்களை மறந்து தூங்கிக் கொண்டிருந்தனர்.

அவர்கள் ராஜகுமாரர்களாயிற்றே!
அரண்மனையில் சுகபோகமாய் இருந்தவர்கள் காடு மலைகளில் அலைந்து திரிந்ததால் வந்த களைப்பு. அதனால் நேரம் போவதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் உறங்கிக்
கொண்டிருந்தனர்.

அவர்களை அழைத்துக் கொண்டு வந்த விஸ்வாமித்திரர், அதிகாலைப் பொழுதில் எழுந்து, கங்கையில் நீராடி, ஜப தபங்களையெல்லாம் முடித்துவிட்டு, ராம- லட்சுணர்களை எழுப்புகிறார்.

நாலரை மணிக்கு எழுப்பத் தொடங்கியவர், ஆறரை மணி வரைக்கும் எழுப்பிக் கொண்டே இருக்கிறாராம்!

ம்ஹூம்… இரண்டு பேரும் எழுந்திருக்கவே இல்லை.
உடனே, ‘கௌசல்யா சுப்ரஜா… கௌசல்யா சுப்ரஜா…’ என்று சொல்லிக் கொண்டே எழுப்பினாராம்.

இன்று ஒருநாள், இந்த தெய்வக்குழந்தையை எழுப்பும் பேற்றினை நான் பெற்றேன்.
ஆனால், தினமும் இவனை எழுப்பும் பேற்றினை ராமனை பெற்ற கோசலை என்னும் கௌசல்யா எத்தனை அரிய பேற்றினை பெற்றவள். அதனால் அவளை தொழுதவாறு ராமனை இவ்வாறு எழுப்புகிறார்..

கோசலையின் தவப்புதல்வா! ராமா! கிழக்கில் விடியல் வருகின்றதே! எழுந்திட்டு புலிபோல் மனிதா செய்திடுவாய் இறைகடமை!.

இந்த கௌசல்யா சுப்ரஜா என்ற
வால்மீகியின் வார்த்தையினை கொண்டே அண்ணங்காச்சாரி என்பவர் எழுதினார்.

அவர் எழுதிய அந்த பாடல்களே இன்றும் திருப்பதியில் எம்.எஸ்.சுப்புலட்சுமி குரலில் திருப்பள்ளியெழுச்சி பாடலாய் ஒலிக்கிறது.

பாடல்.

கௌசல்யா சுப்ரஜா ராம
பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல
கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்.

உத்திஷ்டோத்திஷ்ட கோவிந்த
உத்திஷ்ட கருடத்வஜ
உத்திஷ்ட கமலா காந்தா
த்ரைலோக்யம் மங்களம் குரு மாத சமஸ்த ஜகதாம் மது கைடபாரே
வக்ஷோ விஹாரிணி மனோகர திவ்ய மூர்த்தே
ஸ்ரீ ஸ்வாமினி, ச்ரிதஜன ப்ரிய தான சீலே
ஸ்ரீ வேங்கடேச தயிதே தவ சுப்ரபாதம்.

தவ சுப்ரபாதம் அரவிந்த லோசனே
பவது பிரசன்ன முக சந்திர மண்டலே
விதி சங்கரேந்திர வனிதாபிர் அர்ச்சிதே
விருஷ சைலநாத தயிதே தயாநிதே.

அத்ரிஆதி சப்தரிஷய சமுபாஸ்ய சந்த்யாம்
ஆகாச சிந்து கமலானி மனோகரானி
ஆதாய பாதயுகம் அர்ச்சயிதும் ப்ரபந்நா
சேஷாத்ரி சேகரவிபோ தவ சுப்ரபாதம்.

அதாவது, ‘இப்பேர்ப்பட்ட மகிமை மிக்க ராமபிரானைப் பெற்றெடுத்த கௌசல்யையே! நீ என்ன விரதம் மேற்கொண்டு, இந்த வரத்தை பெற்றாயோ…’ என்று ஸ்ரீராமபிரானின் புகழை மறைமுகமாகச் சொல்லிவிட்டு, அவனுடைய தாயாரை வாயார, மனதாரப் புகழ்கிறார் விஸ்வாமித்திரர்.