திட்டம் போட்டு காய் நகர்த்துகிறதா அ.தி.மு.க?

65

தமிழக எதிர் கட்சியாக இருக்கு அ.தி.மு.க டாஸ்மாக் கடை திறக்க பெரிய எதிர்ப்பு எதுவும் தெரிவிப்பதாக தெரியவில்லை. ஆனால் தமிழக பா.ஜ.க எதிர்ப்பு தெரிவிக்கிறது.

தமிழகத்தில் – அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க திமுக வை – தமிழக ஆளும் கட்சியாக பார்க்காமல் தன் எதிரி கட்சியாக பார்ப்பது தமிழக பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.

தற்போதைய தமிழக பொருளாதார நிலைக்கு தமிழக அரசு சில பல அதிரடி நடவடிக்கைகள் எடுத்துத்தான் ஆக வேண்டும். அதற்கெல்லாம் தமிழக எதிர் கட்சிகள் மறைமுக ஆதரவு தருவதே. தமிழக பொருளாதாரத்திற்கு மிக நல்லது.

தற்சமயம் 2024 வரை தேர்தல் எதுவும் கிடையாது. அதனால் தற்போது அரசியல் செய்ய தமிழக அரசியல் கட்சிகளுக்கு அவசியம் ஏதும் இல்லை.எனவே, தமிழக பொருளாதார நிலைமையை உயர்த்த அனைத்துக்கட்சிகளும் மறைமுக ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். அதை விடுத்து தி.மு.க வை எதிரிக்கட்சியாக நினைத்து மற்றக்கட்சிகள் செயல்படுவது தமிழக பொருளாதாரத்திற்கு நல்லதல்ல.

5 லட்சம் கோடி கடன்கொரோனா சிகிச்சை செலவுகள். லாக்டவுனால் வருவாய் இழப்பு போன்ற விஷயங்களை எதிர்கொள்வது தற்போதைய தமிழக அரசு நிலை. இன்றைய நிலையில் தமிழக அரசுக்கு ஒரு ரூபாய் க்கூட மிக முக்கியம். அவசியம். இதை சொல்வதால் தி.மு.கவிற்கு நான் வக்காலத்து வாங்கும் வேலைச் செய்வதாக சிலர் கருதலாம். ஆனால் உண்மை அது அல்ல.

இன்றைய நிலையில் தமிழக அரசு பொருளாதார நிலை உயர்வே முக்கியம். அதை சரிச்செய்வதே முதற்படி. இதுவே தமிழகத்தில் எதிர்காலத்திற்கு நல்லது.

வாழ்க தமிழகம்