மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளுக்கு தமிழக அரசு தீர்வு காண வேண்டும்!

50

தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்,நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதை தடுக்க வேண்டும்.

டெல்டா மாவட்டங்களில் குறுவை,தாளடி,மற்றும் சம்பா சாகுபடியின் போது அறுவை செய்யப்படும் நெல்,அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது.புதுக்கோட்டை ,தஞ்சை,திருவாரூர்,நாகை ,மயிலாடுதுறை,போன்ற மாவட்டங்களில்
கொள்முதல் நிலையங்களில் போதுமான சிமெண்ட் தரைத்தள வசதியும்,குடோன் வசதியும்,இல்லாததால் மழை காலங்களில் நனைந்து வீணாகியும்,நெல் மூட்டைகளில் பூஞ்சைகள் உருவாகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

டெல்டா மாவட்டங்களில் சில இடங்களில் நெல் மூட்டைகள் தார்பாய் இட்டு மூடியும் வைக்கின்றனஇதனால் அவை மழைகளில் நனைந்து வீணாவது தொடர்கதையாக இருக்கிறது என்று விவசாயிகள் கூறிவருகின்றன. நேற்று முன்தினம் திருச்சி,தஞ்சாவூர்,மாவட்டங்களில் இரண்டு நாட்களாக சூறைக்காற்றுடன்பலத்த மழை பெய்து வருகிறது, இதனால் ஏராளமான நெல் மூட்டைகள் நனைந்து வீணாகியுள்ளன.

திருவாரூர் மாவட்டத்தில் ஓரிரு பகுதிகளில் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை அடிக்கிவைப்பதற்கு சிமெண்ட் தரை இல்லாததால் கட்டைகளை இட்டு அதன்மேல் நெல் மூட்டைகளை அடிக்கிவைக்கின்றன.கொறுக்கை,சுந்தரபுரி,விளக்குடி போன்ற பகுதிகளில் நெல் மூட்டைகளை தரையில் அடிக்கிவைக்கின்றன எனவே சிமெண்ட் தரை வசதி வேண்டும் என்று அப்பகுதி விவசாயிகளில் தொடர்ந்து கோரிக்கை வைக்கின்றன இதனை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும்.

திருச்சி மாவட்டம் முழுவதும்,பல கொள்முதல் நிலையங்களில் திறந்த வெளியில் கொட்டி வைத்திருந்த 25 டன் நெல்மணிகள் நனைந்து சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் மழை காரணமாக நெல்லில் ஈரப்பதம் அதிகரிப்பதால்,உலர வைத்து தூசியை அகற்றிய பின் தான் விற்க முடிகிறது என்கின்றன டன்னுக்கு 4,000 ரூபாய் வரை கூடுதல் செலவு செய்ய வேண்டும் என்கின்றன.டெல்டா மாவட்டங்களில் உழவர்கள் ஆண்டு தோறும் இந்த பிரச்சனைகளை சந்தித்து வருகின்றன,எனவே தமிழக அரசு இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும்.

தமிழகத்தில் பெரும்பான்மையான மாவட்டங்களில் வரும் கால நிலையை கருத்தில் கொண்டு அரசு வருமுன் காப்பதே சிறந்தது மழை காலங்களில் நெல் மூட்டைகள் வீணாவை தடுத்திடவும், பூஞ்சைகள் மூலம் நெல் வீணாவை தடுத்திடவும் குடோன் போன்று சிமெண்ட் தரை அமைத்திடவும், தமிழக அரசு மழையில் நனைந்து வீணாகும் நெல் மூட்டைகளை நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் கோரிக்கையாகும்.

  • பெ.ஜான்பாண்டியன்
    தலைவர் -தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்.