ஸ்தம்பித்தது சென்னை

31

சென்னையில் இருந்து தீபாவளிப் பண்டிகைக்காக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதால் சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல்.

கோயம்பேடில் இருந்து மதுரவாயில் செல்லும் சாலையில் பேருந்துகள் ஊர்ந்து செல்கிறது.

அதேபோல் சென்னை நூறடி சாலையிலும் பேருந்துகள் ஊர்ந்து செல்வதைப் பார்க்க முடிகிறது.

தாம்பரத்தில் இருந்து செங்கல்பட்டு வரை கடும் போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.

அனைத்து பேருந்துகளிலும் இருக்கைகள் முழுவதுமாக நிரம்பி உள்ளதைக் காணமுடிகிறது.

மேலும் செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடி, ஸ்ரீ பெருமந்தூர் சுங்கசாவடி, மேல்மருவத்தூர் அருகே உள்ள திண்டிவனம் சுங்கச் சாவடிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல்.