திமுக சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா வை கண்டித்து செய்தியாளர்கள் வெளிநடப்பு.

44

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி திருவாரூர் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தின் போது செய்தியாளர் சந்திப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக செய்தியாளர்கள் கூட்ட அரங்கில் காத்திருந்த பொழுது மன்னார்குடி சட்டமன்ற திமுக உறுப்பினர் டிஆர்பி ராஜா சபை நாகரிகம் ஏதும் இல்லாமல் செய்து அனைவரையும் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் இருந்து வெளியேறுமாறு பேசினார். இது செய்தியாளர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது சபை நாகரீகம் இல்லாமலும் மரியாதை குறைவாக நடந்து கொண்டதாக மன்னார்குடி திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு ராஜா வை கண்டித்து செய்தியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து மாவட்ட ஆட்சியர் அலுவலக வாசலில் அமர்ந்து தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர்.