தமிழறிஞர்களுக்கு அரசு உதவித்தொகை

52
  • தென்காசி ஆட்சியர் தகவல்.

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்


தென்காசி, ஜூன்.26
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்து தென்காசி மாவட்ட ஆட்சியர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் ஆண்டுதோறும் செயற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின்கீழ் 2021-2022 ஆம் ஆண்டிற்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.


விண்ணப்பிக்கத் தகுதிகள்: 01.01.2021 ஆம் நாளன்று 56 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். ஆண்டு வருவாய் ரூ.72,000/- க்குள் இருக்க வேண்டும். வட்டாட்சியர் அலுவலகத்தில் இணையவழியில் (ஆன்லைன்) பெறப்பட்ட வருமானச் சான்று தமிழ்ப்பணி ஆற்றியமைக்கான ஆதாரங்கள் மற்றும் தமிழ்ப்பணி ஆற்றி வருவதற்கான தகுதிநிலைச் சான்று தமிழறிஞர்கள் இரண்டு பேரிடம் பெற்று விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டும். இதற்கான விண்ணப்பப்படிவம் நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சித் துறையின் வலைத்தளத்திலோ (www.tamilvalarchithurai.com) இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படுபவருக்கு திங்கள்தோறும் உதவித்தொகையாக ரூ.3500ஃ- மருத்துவப்படி ரூ.500/- அவரின் வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும்.

நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இயங்கிவரும் மண்டிலத் தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தில் 31.08.2021 க்குள் அளிக்கப்பட வேண்டுமென தென்காசி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.