அன்னையின் நவசக்தி வடிவங்கள்

36

மனிதனின் வாழ்க்கைத் தேவை, அருளோடு வரும் பொருள்வளம் கொடுப்பவளான திருமகள் அஷ்டலக்ஷ்மிகளாக வணங்கப்படுகிறாள் .

சைவசமயமும், சாக்தசமயமும் அன்னைக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பிக்கிறதோ அதே அளவு ஸ்ரீவைஷ்ணவமும் தாயாருக்கு சிறப்பிடம் கொடுக்கிறது சைவத்தில் நவசக்தியாக வழிபடப்படும் தேவி, வைஷ்ணவத்தில்

ஆதிலக்ஷ்மி
தனலக்ஷ்மி
தானியலக்ஷ்மி
சந்தானலக்ஷ்மி
மஹாலக்ஷ்மி
கஜலக்ஷ்மி
விஜயலக்ஷ்மி
வீரலக்ஷ்மி

என்ற அஷ்டலக்ஷ்மிகளாக போற்றி வணங்கப்படுகிறாள் ..

அன்னை ஒன்பதுவடிவமாக அன்பர்களால் பார்க்கப்படுகிறாள். அன்னையின் இந்த ஒன்பது வடிவங்களுக்கும் தனித்தனி தத்துவங்கள் உள்ளன.

1 – முதலாவது உருவம் – “ மனோன்மணியாகும் ” .. இதன் தத்துவம் – பக்குவப்பட்ட ஜீவாத்மாக்களின் பாவங்களை கழுவி .. களைந்து .. பரமாத்மாவோடு இணைப்பதாகும் ..

2 – இரண்டாவதாக சொல்லப்படும் உருவம் -“ சர்வபூதாமணி “ என்ற உருவத்தோற்றம் உயிர்களோடு ஒன்றி கலந்து அதன் பாவங்களை விலக்குவதாகும் ..

3 – மூன்றாவது – பூமியில் விஷக்கிருமிகள் பெருகாமல் சூரியசக்தியால் நல்லவைகளை வளரச்செய்யும் “ பலபிரதமணி “ உருவமாகும் ..

4 – நான்காவது – சந்திரனில் இருந்துகிடைக்கும் காந்தசக்தியைக் கொண்டு பயிர் பச்சைகளை .. உயிர் இனங்களை தழைத்தோங்கச்செய்யும் “ பலவிகரணி “ வடிவாகும் ..

5 – ஐந்தாவதாக – வானத்தில் உள்ள எல்லா பொருட்களையும் ஏற்று நின்று அவைகள் தன்னில் கலக்கசெய்யும் “ கலவிசரணி “ உருவமாகும் ..

6 – ஆறாவதாக – காற்றில் பிரணவமாய் நிற்கும் “ காளி “

7 – ஏழாவதாக – நெருப்பில் வெப்பமாய் நின்று உயிர்வளரச்செய்யும் “ ரௌத்ரி “

8 – எட்டாவதாக – தண்ணீரில் குளிர்ச்சியையும் .. ஜீவசக்தியையும் நிலைபெற செய்யும் “ சேஸ்றா “ ..

9 – ஒன்பதாக – ஐம்பூதங்களையும் ஆட்சிசெய்யும் “ வாமை “

இந்த நவசக்தியரைக் குறிக்கும் வகையில்தான் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனித பொருட்களான

வெற்றிலை
பாக்கு
மஞ்சள்
குங்குமம்
அட்சதை
சீப்பு
தோடு
கண்ணாடி வளையல்கள் ..
ரவிக்கை ..
ஆகிய 9 பொருட்களையும் தட்சிணையுடன் வைத்து கொடுத்து அன்னமிடுகிறார்கள் ..