மான்புமிகு தமிழக மின்துறை அமைச்சருக்கு…

16

பொறியாளர்களின் குறல்
மாண்புமிகு உள்துறை அமைச்சர் அவர்களே திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் பொதுமக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் விடிவு காலம் பிறந்துவிடும் என்று ஆவலோடு எதிர்பார்த்தார்கள். அதன்படி இன்று மின் துறையில் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு உடனடியாக இலவச மின்சாரம் மற்றும் அனைத்து மகளிருக்கும் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் வசதி போன்ற நல்ல விஷயங்களை நாங்கள் வரவேற்கிறோம். இந்நிலையில் மின்சார வாரியத்தில் பணியாற்றும் பொறியாளர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் சில கேள்விகள் எழுகிறது.

தாங்கள் மின்துறை அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு மின்வாரிய பொறியாளர்களும் தொழிலாளர்களும் சொல்லொனாத் துயரத்தில் பணியாற்ற வேண்டிய சூழ்நிலை நிலவுகிறது .எனவே எங்களுக்கு சில கேள்விகள் எழுகிறது.

 1. கடந்த சில மாதங்களாக Partiulars , particulars என்று சரியாக விடுமுறை நாட்களில் கேட்கப்படுகிறதே?ஏன்? விடுமுறை நாட்களில் அவ்வளவு அவசரமாக இந்த ஆவணங்களை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?

2.விடுமுறை என்பது வெறும் காலண்டரில்அச்சிட்டு பெருமைப் படுத்திக் கொள்வதற்கு தானா?

 1. மின்சார வாரியத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது தங்களுக்கு தெரியுமா தெரியாதா?
 2. இவ்வளவு காலிப்பணியிடங்கள் இருந்தும் இரவு பகல் பாராமல் மின் தடங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளை தொய்வின்றி செய்து கொண்டிருக்கிறோம்.
  காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நீங்கள் எடுத்த நடவடிக்கை என்ன
 3. இந்நிலையில் விண்ணகம் என்கிற செயலியை உருவாக்கி எளிதாக இருந்தாலும் உடனடியாக தீர்க்க வேண்டும் என்கிற பொதுமக்களின் வசதியை நாங்கள் முழு மனதோடு வரவேற்கிறோம்.

அதேநேரம் உடனடியாக குறைகளை நிவர்த்தி செய்வதற்கு அதற்கான கட்டமைப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? பணியாட்கள் உட்பட

6.உடனுக்குடன் குறைகளை தீர்த்து உடனுக்குடன் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று கூறுகிற நிர்வாகம் உடனடியாக சென்று தடைகளை நீக்கி பணி செய்வதற்கு குறைந்தபட்சம் வாகன வசதி பெட்ரோல் வசதிகளும் செய்து கொடுத்து இருக்கிறதா ?அப்படி இல்லை என்றால் எவ்வாறு உடனடியாக மற்ற வேலைகளோடு இந்த வேலையையும் சேர்த்து எவ்வாறு செய்வது?

 1. இன்று பெட்ரோல் விலை 107 ரூபாயை கடந்து விட்ட நிலையில் பல மடங்கு விலைவாசி உயர்ந்து விட்ட நிலையில் விலைவாசி உயர்வுக்கு ஏற்ற பஞ்சப் படியை மிக மோசமாக தொழிலாளர் விரோதப் போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசு கொடுத்த பிறகும் மிகவும் பின்தங்கிய பீகார் உத்தர பிரதேசம் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் கூட கொடுத்து விட்ட நிலையிலும்
  திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது DA வை முடக்குவது தொழிலாளர்களை மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளாகும் என்று பொதுமக்களிடமும் அரசு ஊழியர்களிடமும் பிரச்சாரம் செய்து ஆட்சிக்கு வந்த திமுக எந்த பணம் பயனும் இல்லாமல் வேலையை மட்டும் சுமத்துவது சரியா?
 2. ஆய்வு கூட்டம் ஆய்வு கூட்டம் என்கிற பெயரில் ஒவ்வொரு மண்டலத்திலும் CMDமற்றும் DD போன்றவர்கள் கலந்து கொள்ளக் கூடிய கூட்டம் நடைபெற்றது. கடந்த 4.9.21 அன்று திருச்சியில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில் ஒரு மேற்பார்வை பொறியாளரை பெண் என்றும் பாராமல் நீ ,போ, வா, என்று ஒருமையில் பேசி கீழே போய் உட்கார் என்று அநாகரிகமாக பேசுகிற அதிகாரம் நீங்கள் கொடுத்ததுதானா?
 3. வாரிய தலைவரும் உயர் அதிகாரிகளும் மேற்பார்வையாளர்களுமே மன உளைச்சல் தாங்க முடியாமல் உள்ளது என்றும் இந்த நிலை நீடித்தால் தற்கொலை செய்துகொள்ள வேண்டியதுதான் இன்று புலம்புகின்ற அளவுக்கு மன உளைச்சலை கொடுப்பதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?
 4. மின்னகத்தில் பதிவான புகாருக்கு உடனடியாக பதில் கொடுக்கவில்லை என்கிற காரணத்தைக் காட்டி இரண்டு பிரிவு அலுவலர்களை தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட தெரிந்த நீங்கள் என்றாவது பிரிவு அலுவலரின் மனக்குமுறல்களையும் பணிச்சுமையையும் பற்றி அறிந்ததுண்டா? கேட்டதுண்டா? அதைப்பற்றி யோசித்ததுண்டா?
 5. இன்று மேற்பார்வை பொறியாளரிலிருந்து செயற்பொறியாளர் உதவி செயற்பொறியாளர்கள் வரை அடிக்கடி மீட்டிங் மீட்டிங் என்கிற போர்வையில் டார்ச்சர் கொடுப்பது எதனால் இவர்கள் அனைவரும் பிரிவு அலுவலர்களை பைத்தியக்காரனைப் போல அலையவிட்டு பணியாளர்களையும் மன உழைச்சலுக்கு உள்ளாக்கும்மர்மம் என்ன?
 6. இந்த ஆவணங்களை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள்?
  இதனால் பொதுமக்களுக்கு மின்சார வாரியத்திற்கு அல்லது பணியாளர்களுக்கு ஏதாவது பயன் உள்ளதா?
 7. சமீபகாலமாக எந்த வேலை செய்தாலும் உடனடியாக புகைப்படம் எடுத்து பதிவிட வேண்டும் என்று கடுமையாக வாய்மொழி உத்தரவு போடும் உங்களுக்கு இந்த போட்டோவை எப்படி எடுப்பார்கள் அதற்கான கேமராவை அல்லது ஆண்ட்ராய்டு மொபைல் போனும் ஏதாவது கொடுக்கப்பட்டு இருக்கிறதா அதற்கான புதிய ஆட்களை கொடுக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தீர்களா?
 8. அவ்வாறு ஆய்வு செய்து எந்த வசதியும் செய்யப்படவில்லை என்று தெரிந்திருந்தால் போட்டோ எடுப்பதற்கான கேமராவையும் ஆண்ட்ராய்டு மொபைல் போனையும் கொடுத்து அதற்குப் போதிய ஆட்களை நியமனம் செய்து பணி செய்ய நீங்கள்
  எடுத்த நடவடிக்கை என்ன?
  இந்தப் போட்டோவை வைத்து என்ன செய்யப் போகிறீர்கள் அதனால் என்ன பயன் ?
 9. தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் பெண்களுக்கும் மற்ற பெண் அதிகாரிகள் ஊழியர்களுக்கும் இயற்கை உபாதை இருப்பதும், அதற்கு ஓய்வு தேவை என்பது தங்களுக்கு தெரியாதா? அவர்களையும் விடுமுறை நாட்களில் பணிசெய்ய வற்புறுத்துவது என்ன லாஜிக்.?
 10. இவ்வளவு மன உளைச்சலோடு பொறியாளர்களும் தொழிலாளர்களும்பணி செய்தால் அந்தப் பணி முழுமையாகவும் சிறப்பாகவும் இருக்கும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
 11. குறைந்த மின் அழுத்தம், அதிக மின் அழுத்தம் உள்ள மின் மாற்றிகள் விபரம் கேட்கப்பட்டு விவரம் கொடுக்கப்பட்டது. இந்தக் கடினமான நிலையிலும் ஒவ்வொரு பொறியாளரும் நன்கு ஆராய்ந்து மேற்கண்ட விவரங்களை கொடுத்து அந்தப் பணியை முடிப்பதற்கு தேவையான தளவாடப் பொருட்கள் மற்றும் போதிய கால அவகாசம் வேண்டாமா?
 12. என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ தெரியாது 31 .12. 2021 க்குள்அனைத்து மின்மாற்றி களையும் இயக்கத்திற்கு கொண்டு வரவேண்டும் என்று உத்தரவிட தெரிந்த நீங்கள் மின்மாற்றி கூட கொடுக்காமல் கொடுக்காத மின்மாற்றியை எப்படி செயல்பாட்டுக்கு கொண்டு வருவான் என்று யோசித்தீர்களா?
 13. இல்லை,இதை நாங்கள் திறமையாக செய்து விட்டோம் என்று பொதுமக்களிடம் ஊடகத்திலும் தம்பட்டம் அடித்துக் கொள்ளவா?
 14. இல்லை இவர்களை எவ்வளவு நசுக்கினாலும் மண் புழு போல் துடித்துக்கொண்டு பணியை செய்கிறார்களே! என்று நசுங்கிய புழுக்கள் மீது நின்றுகொண்டு பெருமைப்பட்டுக் கொள்ளவா?
 15. இல்லை நீங்கள் ஹிட்லரைப் போல அல்லது முசோலினியை போல ஆக வேண்டும் என்ற நோக்கத்திலா?
 16. இல்லை இவர்களை இப்படி நசுக்குவதன் மூலம் வாரியத்தை விட்டு ஓடிவிடுவார்கள், பிறகு மின்சார வாரியத்தை சுலபமாக தனியாருக்கு விற்றுவிடலாம் என்ற நினைப்பா?
 17. இல்லை எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறார்கள் என்கிற வடிவேலு போன்ற ஜோக்கர்கள் என்று நினைத்து விட்டீர்களா?
 18. இல்லை இதனால் மின் வாரியத்தில் ஏதாவது முறையாக பணி நடக்கும் அந்தப் பணி சிறப்பாக நடக்கும் என்று நம்புகிறீர்களா?

25.பொறியாளர்களும் தொழிலாளர்களும் நசுக்க நசுக்க துடித்துக் கொண்டு தன் வேலையை செய்து கொண்டு இருப்பதற்கு ஒன்றும் மண்புழு அல்ல. என்பதை தாங்கள் உணர வேண்டும்.

 1. தமிழ்நாட்டில் நிலக்கரி பற்றாக்குறையால் பயங்கரமான மின்வெட்டு ஏற்படும் என்று ஊடகங்கள் அனைத்தும் ஊளையிடுகின்றனவே! அவற்றின் மீது நீங்கள் கவனம் செலுத்தி இருக்கிறீர்கள?எடுத்த நடவடிக்கை என்ன? இன்னும் நூற்றுக்கணக்கான கேள்விகள் ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஒவ்வொரு பொறியாளனுக்கும் மனதில் எழுகிறது. இதற்கான விளக்கத்தை மாண்புமிகு மின்துறை அமைச்சர் அவர்கள் தொழிலாளர்களுக்கும் பொறியாளர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம்
  தங்களின் தொழிலாளர்கள் பொறியாளர்கள் விரோத போக்கை உடனடியாக கைவிட வேண்டும்.
  இல்லையேல்
  தமிழகம் முழுவதும் அனைத்து பொறியாளர்களையும் தொழிலாளர்களையும் திரட்டி நாங்கள் மண்புழு வல்ல வீரமிக்க போர்க்குணமிக்க படைவீரர்கள் என்பதை காட்டுவோம்

முறையான தரமான தளவாட சாமான்களை தடையில்லாமல் கொடுக்க வேண்டும்
*சாமான்களை கொண்டு செல்வதற்கு தகுந்த வாகன ஏற்பாடு செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
*எவ்வித சாமான்களும் கொடுக்காமல் பணி முடிக்கப்பட்டு விட்டதாகவோ போதிய கால அவகாசம் இல்லாமல் பணிசெய்ய வற்புறுத்துவதையோஅனுமதிக்க மாட்டோம்
*அனைத்து பொறியாளர்களே தொழிலாளர்களே ஒன்றுபடுவோம் போராடுவோம் வெற்றி பெறுவோம்
*ஊர் கூடி தேர் இழுத்தால் அந்தத் தேர் அழகாக நகர்ந்து வரும் .இல்லையேல் ஒரு இம்மியும் நகர்த்த இயலாது என்பதை நாம் உணர்ந்து
இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று புறப்படு தோழனே

       இவன்

மாநில துணை பொதுச்செயலாளர்
தமிழ்நாடு பவர் இன்ஜினியர்ஸ் ஆர்கனைசேஷன்

மாநில செயற்குழு உறுப்பினர்
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு