அர்ஜுன் சம்பத் கண்டன அறிக்கை!

22

நக்சல் வாதிகளின் கூடாரம் ஆகிவிட்ட ஆனந்தவிகடன் பத்திரிக்கையும் திமுக ஆதரவு பெற்ற திமுகவிடம் கூலி வாங்கிக்கொண்டு செயல்படுகின்ற கம்யூனிச திராவிட இயக்க ஊடகங்கள் வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு பாரதிய ஜனதா கட்சியை அவமானப்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டு ஒத்தை ஓட்டு பாரதிய ஜனதா கட்சி என்று நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

உண்மையில் கோவை குருடம்பாளையம் வார்டு இடைதேர்தலில் 9 -வது வார்டில் அதிமுக பாஜக கூட்டணி சார்பில் அதிமுக மட்டுமே போட்டியிட்டது .

சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட #கார்த்திக் தேர்தல் பணிகளில் இருந்து விலகி இருந்தாலும் வாக்கு சீட்டில் அவர் பெயரும் கார் சின்னமும் இருந்தது . இந்த தேர்தலில்அதிமுக பெற்ற 196 வாக்குகளே அதிமுக- பாஜக கூட்டணி வாக்குகள்.

அப்ப அந்த கார்த்திக் சுயேட்சை வேட்பாளராக நின்று கார் சின்னத்தில் போட்டியிட்டு உள்ளார் டம்மி வேட்பாளராக இருந்து உள்ளார். மேலும் கார்த்திக் அவர்கள் ஐந்தாவது வார்டில் அவரது முகவரி அவரது குடும்பத்தார் ஆகியோர் உள்ளனர் அவர்களுக்கு ஓட்டு 4வது வார்டில் தான் அவரது குடும்பத்தார் வந்து எப்படி 9வது வார்டில் வாக்களிக்க முடியும். குடும்பத்தார் கூட ஓட்டு போடவில்லை என்கின்ற கட்டுக்கதையை விகடன் பரப்பி வருகிறது.

ஏதோ தாமரை சின்னத்திலேயே நின்று ஒரு ஓட்டு என கிளப்பிட்டு தங்கள் வெறுப்புணர்வை வெளி படுத்திக்கொள்ளும் கூட்டத்தின் திட்டமிட்ட சதி வேலை இது.

இத்தகைய வதந்தியை பரப்பி வெறுப்பு பிரச்சாரம் செய்துவரும் ஊடகங்கள் மீது பாரதிய ஜனதா கட்சி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்தியில் அதிகாரத்தில் உள்ள பாரதிய ஜனதா கட்சி இது விஷயத்தில் தீவிரமாக செயல்பட வேண்டும்.