போலி நீதிமன்ற உத்தரவு தயாரித்து மோசடி.

10

நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி போலியான வழக்கறிஞர் அடையாள அட்டை மற்றும் திண்டுக்கல் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தின் விடுதலை உத்தரவு நகல் ஆகிய ஆவணங்களை தயாரித்து, அந்த போலி ஆவணங்களை பயன்படுத்தி பாதிக்கப்பட்டவர்களின் மகன் ஒரு கொலை வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டுவிட்டார் என்று அந்த தம்பதியரை ஏமாற்றி, அவர்களிடமிருந்து ரூ 48.03 இலட்சம் பணத்தை மோசடியாக பெற்ற M. கார்த்தி என்கிற குற்றவாளிக்கு ஆறு ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து, குற்றவாளியின் இக்குற்றத்தை டிஜிடல் பயங்கரவாதம் என திண்டுக்கல் குற்றவியல் நடுவர் எண்:II – நீதிமன்றம் கடுமையாக சாடியுள்ளது.