சா…மீ.. எனக்கு ஒரு உம்(ண்மை)ம.. தெரிஞ்சாகனும் சாமி..?

13

உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து லட்சுமிப்பூர் கேரி வன்முறைக்கு வழக்கு பதிவு செய்கிறது… அப்படின்னு ஒரு அருமையான வலைத்தள பதிவுலே பார்த்தேன் சாமி….
அதை பதிவு செய்த அந்த சாமிக்கு நன்றியோ… நன்றி சாமி…
நமது தேசத்தில் நீதி நேர்மை சத்தியமாக உள்ளது ஆனால் அதே நேரத்தில்… சா…மீ.. எனக்கு ஒரு உம்(ண்மை)ம.. தெரிஞ்சாகனும் சாமி..?
அதே நம்ம உச்சநீதிமன்றம் மேற்கு வங்கத்தில் தேர்தல் முடிந்து நடந்த வன்முறைக்கு தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யவில்லையே.. ஏன் சாமி..?

அதே உச்சநீதிமன்றம் மகாராஷ்டிரா பால்கர்ஹில் 2 சாதுக்கள் அடித்துக் கொல்லப்பட்ட போது தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவில்லையே…அது ஏ… சாமி…?

அப்புறம் அதே உச்சநீதிமன்றம் அமைதி ஊர்வலம் என்று பொய் சொல்லி அனுமதி பெற்று பிறகு டெல்லி செங்கோட்டையில் நடந்த வன்முறைக்கு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவில்லையே… சாமி

அதே உச்சநீதிமன்றம் 2020 டில்லியில் நடந்த கலவரத்திற்கும் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்யவில்லையே… சாமி

இதையெல்லாம் நான் கேட்டா நீ இப்போ யாருன்னு தெரியுது நீ ஒரு சங்கி’ மங்கின்னு கதறுவானுங்க… சாமி

அவ்வளவு ஏன்?? காஷ்மீரத்தில் 1990ஆம் ஆண்டு இஸ்லாமியர்கள் ஒன்று சேர்ந்து இந்துக்களை நம் நாட்டுக்குள்ளேயே அவர்களாக அடித்து துரத்தினப்போ நம்ம உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்யவில்லையே…. சாமி
இப்பவும் ஒண்ணும் புரியலையே சாமி…

ஆட்சியும் அதிகாரமும் பாரதிய ஜனதா கட்சியுடம் இருந்தாலும் இந்த தேதி வரைக்கும் சட்டத்துறையும், மற்ற பல துறைகளும்…. ஏதோ திருட்டுப்பயலுக கையிலே தான் இருக்குன்னு நினைக்கிறேன் சாமி… சா…மீ.. எனக்கு ஒரு உம்(ண்மை)ம.. தெரிஞ்சாகனும் சாமி..?

தொகுப்பு:- சங்கரமூர்த்தி… 7373141119