கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே …!

19

அருள்மிகு ஸ்ரீ இந்து சங்கரர் ஸ்ரீ காமாட்சி அம்பாள் திருக்கோவில்

தாயார்:
ஸ்ரீ காமாட்சி அம்பாள் .

இக் கோவில் ஜெர்மனி நாட்டிலுள்ள ஹம் நகரில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோவிலாகும். ஐரோப்பிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய இந்துக் கோயிலான இக்கோயில் திராவிடக் கட்டிடக்கலையில் கட்டப்பட்டு 2002 ஆம் ஆண்டு ஜூலை 7 ஆம் நாள் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இது காமாட்சி அம்மனுக்கு இந்தியா மற்றும் தென் ஆசியா பகுதிகளுக்கு வெளியே அமைந்துள்ள ஒரே கோயிலாகும்.

காஞ்சி காமாட்சியம்மன் கோயில் வடிவில் பதினைந்து ஏக்கர் பரப்பளவில் கிழக்கு பார்த்த கோயிலாக அமைந்துள்ளது.

இக் கோயிலில் சிவன், விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகன், லட்சுமி நாராயணர், நவக்கிரகம், ஐயப்பன் மற்றும் பைரவர் சந்நிதிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நிகழும் தேர்த்திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும்

ஹம் நகர்

ஜெர்மனி.

ஐரோப்பா.🙏