குழந்தைகளை கொரோனா தாக்குவது அதிகரிப்பு.

56

இந்தியாவில் கொரோனா தொற்று குழந்தைகளை தாக்குவது திடீரென அதிகரித்துள்ளதால் மிகுந்த கவனம் தேவை என்று சுகாதாரத்துறை நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 2021 மார்ச் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, இந்தியாவில் குழந்தைகளை தொற்று தாக்குவது திடீரென அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் தொற்று பாதிப்பு 2.80 சதவீதத்தில் இருந்து 7.04 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதாவது நூறு பேரில் 7 பேர் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளாக உள்ளனர்.

மூன்றாம் அலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது என்று கூறியுள்ள நிபுணர்கள் 3வது அலையில் இருந்து குழந்தைகளை மிகவும் கவனமாக பாதுகாக்க வேண்டும் என்று முன்னெச்சரிக்கை விடுத்துள்ளனர். 18 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மிசோரம் மாநிலத்தில் குழந்தைகள் பாதிப்பு 16.48 சதவீதமாக பதிவாகி உள்ளது.