இலங்கையில் பொருளாதார எமர்ஜென்சி

79

சுமார் 2 கோடியே 20 லட்சம் ம க்களை உடைய இலங்கையில் கொரானாவினால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியினால் இலங்கை அரசின் அன்னிய செலாவணி கையிருப்பு குறைந்ததால்
இறக்குமதி குறைந்து விட்டது.

இதனால் இருக்கும் உணவுபொருட்ளை வியாபாரிகள் பதுக்கி வைத்து தட்டுபாட்டினை உருவாக்கியதால் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசிகடுமயாக உயர்ந்து இருக்கிறது.

ஒரு கிலோ சீனி 250 ரூபாய் பருப்பு 200
ரூபாய் அரிசி 220 ரூபாய்.என்று அனை த்து உணவு பொருட்களின் விலையும்
உயர்ந்து விட்டது. இதனால் இலங்கை
அரசு பொருளாதார அவசர நிலையை
அறிவித்து இருக்கிறது.

இதன் படி உணவு பொருட்களின் வினி யோகத்தை கண்காணிக்க ராணுவத்தை சார்ந்த அதிகாரி் நியமிக்கப்பட்டு இருக்கிறார்.ராணுவத்தின் கைகளில் உணவு பொருட்கள் வினியோகம் வந்தாலும் இறக்குமதி உயராமல் இலங்கையில் உணவு ப்பொருட்களின் விலை குறையாது

இலங்கை அரசின் அன்னிய செலாவணி
உயராமல் இலங்கையில் இறக்குமதி உயர முடியாது. அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலை உயர்வு ஏழை மக்களை பட்டினி சாவுக்கு கொண்டு செல்லும்